தமிழ்நாடு பொங்கல் பரிசுத் திட்டம்

author
Submitted by shahrukh on Tue, 07/01/2025 - 09:40
தமிழ்நாடு CM
Scheme Open
Highlights
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கவுள்ளது.
  • தமிழ்நாடு பொங்கல் பரிசுத் திட்டத்தின் கீழ் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் ரூ.1,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
  • மேலும், பயனாளிகளுக்கு ரொக்கப் பரிசுடன் சேர்த்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
  • Customer Care
    • தமிழ்க அரசின் பொங்கல் பரிசுத் திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற அருகிலுள்ள நியாய விலைக் கடையை தொடர்பு கொள்ளவும்.
    திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
    திட்டத்தின் பெயர் தமிழ்நாடு பொங்கல் பரிசுத் திட்டம்.
    துவங்கிய தேதி 05-01-2024.
    பயன்கள்
    • பண உதவித் தொகை 1000/-.
    • பொங்கல் பரிசுத்  தொகுப்பு.
    பயனாளிகள் தமிழ்நாடு குடியுரிமை பெற்றவர்கள்.
    சந்தா திட்டம் பற்றிய உடனடி தகவலுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்.
    விண்ணப்பிக்கும் முறை நியாய விலை கடை மூலமாக அணுகலாம்.

    திட்ட அறிமுகம்

    • பொங்கல் என்பது தென்னிந்தியாவில் தமிழக மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.
    • பொதுவாக பொங்கல் பண்டிகை ஒரு வாரம் நடைபெறும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும்.
    • இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முக்கிய காரணம், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே நோக்கமாகும்.
    • இத்திட்டத்தின் பெயர் "தமிழ்நாடு பொங்கல் பரிசுத் திட்டம்".
    • இத்திட்டம் "தமிழ்நாடு பொங்கல் பரிசுத் திட்டம்""தமிழ்நாடு பொங்கல் தொகுப்பு" மற்றும் "தமிழ்நாடு பொங்கல் பரிசு தொகை" எனத் தமிழகத்தில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கவுள்ளது.
    • தமிழ்நாடு பொங்கல் பரிசுத் திட்டத்தின் கீழ் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் ரூ.1,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
    • மேலும், பயனாளிகளுக்கு ரொக்கப் பரிசுடன் சேர்த்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
    •  பொங்கல் பரிசுத் தொகுப்பில்  பின்வரும் பொருட்களைக் கொண்டுள்ளது :-
      • 1 கிலோ பச்சை அரிசி.
      • 1 கிலோ சர்க்கரை.
      • 1 கரும்பு.
      • 20 கிராம் முந்திரி.
      • கிராம் உலர் திராட்சை.
      • 5 கிராம் ஏலக்காய்.
    • "தமிழ்நாடு சேலை மற்றும் வேட்டி திட்டத்தின்" கீழ் புடவை மற்றும் வேட்டியும் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும்.
    • தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்தின் கீழ், அனைத்து அரிசி மற்றும் சர்க்கரை அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் ரூ. 1,000/- ரொக்கப் பரிசும் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பும் தடையின்றி கிடைக்க பெறுவர்.
    • ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
    • தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2 கோடியே 19 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைய உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • ரேஷன் கடைகள்/ நியாய விலைக் கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
    • தமிழக அரசு பொங்கல் பரிசுத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் தங்களுடைய அரிசி/ சர்க்கரை அட்டையை எடுத்து கொண்டு, அருகிலுள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கமாக ரூ. 1,000/- பெற்றுக்கொள்ளலாம்.

    திட்டத்தின் பயன்கள்

    • தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் பின்வரும் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்ப்டுடம் :-
      • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயனாளிகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
      • பரிசுத் தொகுப்புடன் ரூ. 1,000/- ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
      • பொங்கல் பரிசுத் தொகுப்பில் :-
        • 1 கிலோ பச்சை அரிசி.
        • 1 கிலோ சர்க்கரை.
        • 1 கரும்பு.
        • 20 கிராம் முந்திரி.
        • 20 கிராம் திராட்சை.
        • 5 கிராம் ஏலக்காய்.
        • சேலை மற்றும் வேட்டி.

    பயனாளிகள் தகுதி நெறி முறைகள்

    • தமிழ்நாடு பொங்கல் பரிசுத் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பயனாளிகளுக்கு மட்டுமே ரொக்கப் பரிசும் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் :-
      • பயனாளி தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
      • பயனாளி அரிசி அட்டை அல்லது சர்க்கரை அட்டை வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
      • தமிழர் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளும் இதில் அடங்குவர்.

    தேவையான ஆவணங்கள்

    • தமிழ்நாடு பொங்கல் பரிசுத் திட்டத்தின் கீழ் ரொக்கப் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பின் பயன் பெற  கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தேவை :-
      • ஆதார் அட்டை.
      • அரிசி அட்டை அல்லது சர்க்கரை அட்டை.
      • கைபேசி எண்.
      • இலங்கை அகதிகள் அட்டை.

    விண்ணப்பிக்கும் முறை

    • 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுப் பெற்று பயன் பெற தகுதியான பயனாளிகள் எங்கும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
    • அனைத்து அரிசி அட்டை தரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
    • பயனாளிகள் அருகில் உள்ள நியாய விலைக் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்று கொள்ளலாம்.
    • நியாய விலைக் கடையில், கூட்ட நெரிசலைத் தடுக்க பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்படும்.
    • பயனாளிகளுக்கு அவர்களின் டோக்கன் எண்ணுக்கு ஏற்ப வரிசையில் பொங்கல் பரிசுகள் வழங்கப்படும்.
    • ஒவ்வொரு பொங்கல் பரிசிலும் 1 கிலோ பச்ச அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கரும்ப, திராட்சை, முந்திரி, ஏலக்காய் அடங்கிய தொகுப்பு மற்றும் ரூ. 1,000/- ரொக்கப் பரிசும் பெற்று பயனாளிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழலாம்.

    முக்கிய இணைய தள இணைப்பு முகவரிகள்

    பயனாளிகள் சேவை மையம்

    • தமிழ்க அரசின் பொங்கல் பரிசுத் திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற அருகிலுள்ள நியாய விலைக் கடையை தொடர்பு கொள்ளவும்.

    Comments

    புதிய கருத்தை சேர்

    எளிய உரை

    • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
    • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்