தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

author
Submitted by shahrukh on Thu, 09/05/2024 - 15:02
தமிழ்நாடு CM
Scheme Open
Highlights
  • தகுதியான பெண் பயனாளிகளுக்கு கீழே குறிப்பிட்டுள்ள நிதி உதவி மாதந்தோறும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கிடைக்கப்படும் :-
    • நிதி உதவி மாதத்திற்க்கு ரூ. 1,000/-.
Customer Care
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.
தொடங்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2023.
பயன்கள் மாதாந்திர நிதி உதவி ரூ. 1,000/-.
பயனாளிகள் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இணையதளம்.
குறைத் தீர்க்கும் பிரிவு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
குழுசேர திட்டம் தொடர்பான புதுப்பிப்பைப் பெற இங்கே குழுசேரவும்.
விண்ணப்பம் முறை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் படிவம் மூலம்.

திட்ட அறிமுகம்

  • தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்பது தமிழக அரசின் முக்கியமான சமூக-பொருளாதார நலத்திட்டமாகும்.
  • இது தொடங்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2023.
  • இந்தத் திட்டத்தைத் தொடங்குவதின் முக்கிய நோக்கம், பெண்களுக்கு பொருளாதார ரீதியான உரிமையை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரும்.
  • 27.03.2023 அன்று தமிழக முதல்வர் இத்திட்டத்தை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் , “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்” என்பதை பின்வரும் உருதியான அறிக்கை மூலம் அதாவது “மகளிர் உரிமை மானியத் திட்டம்/ மகளிர் உரிமைத்தொகைத் திட்டம், சமூக நீதிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களேயே இத்திட்டமானது ஒரு மகத்தான படிக்கல்லாக வரலாற்றில் பதிவு செய்யப்படும், மாதம் ஆயிரம் ரூபாய் என சுமார் ஒரு கோடி பெண் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும். 'கலைஞர் மகளிர் உரிமை திட்டம்' வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தமிழ்நாட்டில் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகிறது :-
    • "கலைஞர் மகளிர் உரிமை திட்டம்".
    • "கலைஞர் மகளிர் உரிமை தோகை திட்டம்".
    • "தமிழ்நாடு மகளிர் உரிமை தோகை திட்டம்".
    • "தமிழ்நாடு மகளிர் உரிமை நிதி".
    • "தமிழ்நாடு பெண் கலைஞர்கள் உரிமை திட்டம்".
  • இத்திட்டத்தின் பெயரானது மறைந்த முன்னாள் தமிழக முதல் அமைச்சர் திரு. கருணாநிதி, கலைஞர் (கலை நிபுணர்) என்று அனைவராலும் அறியப்பட்டவர்.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் திட்டத்தின் கீழ் தமிழக பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும்.
  • மாதாந்திர நிதி உதவி ரூ. 1,000/-  அதாவது ஆண்டிற்க்கு ரூ. 12,000/- அனைத்து தகுதியுள்ள பெண் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, குடும்பத் தலைவிகள் மாதாந்திர நிதி உதவிக்கு தகுதியுடையவர்கள்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான பதிவு தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
  • அனைத்து தகுதியுடைய பெண் பயனாளிகளும் யதங்களுக்கு அருகிலுள்ள பொது விநியோக நியாய விலைக் கடை/ ரேஷன் கடை/ முகாமிற்க்குச் சென்று இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம்.
  • கடையில் இருக்கும் தன்னார்வத் தொண்டர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய பெண்களுக்கு உதவுவார்கள்.
  • பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவையொட்டி செப்டம்பர் 15, 2023 முதல் நிதியுதவி விநியோகம் தொடங்கப்பட்டது.
  • பெண் பயனாளிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மாவட்ட வாரியான தேதிகள் மற்றும் பதிவு முகாமின் விவரங்கள் இதில் காணலாம்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பற்றிய உறுதிபடுத்தகூடிய செய்தி வரவில்லை என்று பலர் புகார் அளிக்கின்றனர். அதனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பதிவு செய்துகொண்டவர்களை, சரிபார்பிற்க்கு பிறகே அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கப்படும்.
  • பயனாளிகள் முகாம்களில் பதிவு செய்யும் போது பெறக்கூடிய ஒப்புகை ரசீதை பத்திரப்படுத்த வேண்டும்.
  • தற்போது தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டதின் இணையதளம், தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
  • பெண் பயனாளிகள், கூடுதல் தகவல்களை காணவும், அதன் நிலையை அறியவும் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் கட்டண நிலை என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பெண் பயனாளிகளுக்கும் தமிழ்நாடு அரசால் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
  • ஆனால் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி கிடைக்கப்படவில்லை.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டதின் விண்ணப்பம் அவர்களுக்கு தற்காலிகமாக நிராகரிக்கப்படுகிறது.
  • ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
  • பெண் பயனாளிகள் குறுஞ்செய்தி கிடைக்கப்பட்ட் 30 நாட்களுக்குள் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

திட்டத்தின் பயங்கள்

  • தகுதியான பெண் பயனாளிகளுக்கு கீழே குறிப்பிட்டுள்ள நிதி உதவி மாதந்தோறும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கிடைக்கப்படும் :-
    • நிதி உதவி மாதத்திற்க்கு ரூ. 1,000/-.

தகுதி நெறி முறைகள்

  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகள் தமிழ்நாடு அரசால் வரையுருக்கப்பட்டு, தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயன்களை தகுதியுள்ள பெண் பயனாளிகளுக்கு கிடைக்கப்படும் :-
    • பெண் பயனாளி தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருப்புவாசியாக இருக்க வேண்டும்.
    • பெண் பயனாளியின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
    • பெண் பயனாளியின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • பெண் பயனாளியின் குடும்பத்தின் நிலம் கையிருப்பானது :-
      • சதுப்பு நிலம் 5 ஏக்கருக்கு மிகாமல். அல்லது,
      • சதுப்பு நிலம் 10 ஏக்கருக்கு மிகாமல்.
    • பெண் பயனாளி குடும்பத்தின் ஆண்டு மின் நுகர்வு 3,600 யூனிட்டுகளுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
    • திருமணமாகாத பெண்கள், பணிப்பெண்கள் மற்றும் திருநங்கைகள், குடும்பத் தலைவியாக இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
Tamil Nadu Kalaignar Magalir Urimai Thittam Scheme Eligibility

தகுதியின்மைகள்

  • தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்க்கான தகுதியின்மையின் நிபந்தனைகள் பின்வருமாறு :-
    • பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2,50,000/- க்கு மேல் இருந்தால்.
    • எந்தவொரு குடும்ப உறுப்பினரும் வருமான வரி செலுத்துபவராகஇருந்தால்.
    • கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றின் பணியாளர்கள்/ ஓய்வூதியம் பெறுபவர்கள் :-
      • மத்திய அரசு.
      • மாநில அரசு.
      • பொதுத்துறை நிறுவனம்.
      • வங்கி.
      • உள்ளாட்சி அமைப்புகள்.
      • கூட்டுறவு நிறுவனங்கள்.
    • பின்வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக இருந்தால் :-
      • பாராளுமன்ற உறுப்பினர்.
      • சட்டமன்ற உறுப்பினர்.
      • மாவட்ட பஞ்சாயத்து தலைவர்.
      • மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் கவுன்சிலர்.
      • ஊராட்சி ஒன்றிய தலைவர்.
      • ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்.
      • கிராம பஞ்சாயத்து தலைவர்.
      • தலைவர் மற்றும் கவுன்சிலர் மாநகராட்சி/ நகராட்சிகள்/ டவுன் பஞ்சாயத்து.
    • பின்வரும் வாகனங்களில் ஏதேனும் ஒன்றை, பெண் பயனாளிகளின் குடும்பத்தினர் வைத்திருந்தால் :-
      • கார்.
      • ஜீப்.
      • டிராக்டர்.
      • கனரக வாகனங்கள்.
      • குடும்பத்தில் உள்ள வணிகர்களின் ஆண்டு விற்றுமுதல் ரூ. 50,00,000/-.
      • குடும்பத்தில் ஓய்வூதியம் பெறுபவர்.

தேவையான ஆவணங்கள்

  • தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1,000/- விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் பின்வருமாரு :-
    • தமிழ்நாட்டின் இருப்பிடம் அல்லது இருப்பிடச் சான்று.
    • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
    • குடும்ப அட்டை.
    • ஆதார் அட்டை.
    • வருமானச் சான்றிதழ்.
    • மின் ரசீது.
    • கைபேசி எண்.
    • வங்கி கணக்கு விவரங்கள்.

விண்ணப்பிக்கும் முரை

  • தகுதியுடைய பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பதிவு செய்துகொள்ள, தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடை/ ரேஷன் கடையை அனுகலாம்.
  • தொடக்கத்தில், விண்ணப்பப் பதிவுப் படிவங்கள் மூலம் ரேஷன் கடை/ நியாய விலைக் கடைகளில் பதிவு செய்யப்படும்.
  • கடைகளில் இருக்கும் தன்னார்வத் தொண்டர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பதிவுப் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுவார்கள்.
  • அதைச் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் ரேஷன் கடைகளில் இருக்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.
  • பின்னர் பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் நடைமுறைப்படுத்தும் துறைக்கு அனுப்பப்படும்.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
  • சரிபார்ப்பிற்க்கு பிறகு, மாதாந்திர நிதி உதவி ரூ. 1,000/-, செப்டம்பர் 15 முதல் பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பதிவுக்கான பதிவு முகாம்கள் 24-07-2023 முதல் 16-08-2023 வரை நடைபெறும்.
  • பெண் பயனாளிகள் அவர்களின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாவட்ட முகாம் விவரங்கள் இங்கே காணலாம்.
  • 18-09-2023 அன்று, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்பம் ஏற்கப்பட்ட பெண் பயனாளிகளின் தொலைபேசி எண்ணுக்கு, தமிழ்நாடு அரசின் குறுஞ்செய்தி அணுப்பப்படும்.
  • ஆனால் பலருக்கு குறுஞ்செய்தி கிடைக்காததற்க்கு காரனம், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
  • ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், ஏனெனில் அவர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யளாம்.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கீழ் அனைத்து முறையீடுகளையும் வருவாய் கோட்ட அலுவலர் பரிசீலிப்பார்.
  • பெண் பயனாளி தங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையம் தகவல்கள் இங்கே காணலாம்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், பெண் பயனாளிகள்  ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.
Tamil Nadu Kalaignar Magalir Urimai Thittam Scheme Apply Procedure

முக்கியமான இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

Comments

கருத்து

புதிதாக பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்

கருத்து

எனது கலைஞரும் மகளிர் உதவி திட்ட காசை போன் பேவில் 619 என காமிக்கிறது ஆனால் பேங்கில் சென்றால் 19 காண்பிக்கிறது உன்னால் எனக்கு ஏறினது ஆயிரம் ரூபாய்

கருத்து

புதிதாக பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்

கருத்து

My mother didn't fill the form she need to fill it what is the procedure and where to apply

கருத்து

my ration card no-333374xxஎனது போனில் massage எதுவும் வரவில்லை .

கருத்து

நான் விதவை எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எனக்கு எந்தவித பணமும் வரவில்லை

கருத்து

We have applied for the MAGALIR URIMAI Rs 1000 SCHEME, but confirmation message is not received , kindly do the needful please.

AADHAR NO - 4621135247xx
CONTACT NO -90925192xx

கருத்து

my ration card no-333374xxஎனது போனில் massage எதுவும் வரவில்லை .

கருத்து

Respected Sir
I had not received the message of magalir urimai thogai and I don't have the income so this very helpful to me
Thank you

கருத்து

என் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதா இல்லை யா ஏன் எனக்கு பதில் வரவில்லை

கருத்து

வணக்கம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உங்களுடைய விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண் (3334255571xx) .நன்றி - TNGOVT. Payment pending so Pls update

கருத்து

படிவம் கொடுத்தேன் குரும் செய்தி வரவில்லை

கருத்து

வணக்கம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உங்களுடைய விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண் (3337255980xx) .நன்றி - TNGOVT

கருத்து

படிவம் கொடுத்தேன் குரும் செய்தி வரவில்லை

In reply to by R.NEELAVATHI (சரிபார்க்கப்படவில்லை)

நிரந்தரசுட்டி

கருத்து

நான் விதவை எனக்கு எந்தவித பணமும் வரவில்லை எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எந்த வருமானமும் கிடையாது

கருத்து

IN THAT KALAINGNAR SCHEME BUT I WILL GIVEN EQUITAS BANK ACCOUNT DETAILS BUT AMOUNT CREDIT IN BOB BANK THAT BANK IS CHARGE TO ME 20000 WHAT CAN WE DO FOR THIS PLS TELL HOW TO CHANGE MY BANK ACCOUNT

கருத்து

நான் ஏற்கனவே படிவத்தை சமர்ப்பித்துள்ளேன் ஆனால் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கருத்து

நான் ஏற்கனவே படிவத்தை சமர்ப்பித்துள்ளேன் ஆனால் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கருத்து

தொலைபேசி எண் மாறியதால் எனக்கு உதவித்தொகைவரவில்லை இதை சரி செய்து கொடுத்தால் நல்லது

கருத்து

மகளிர் உதவி தோகையின் படிவத்தை நான் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளேன் இன்னும் எனக்கு எந்த பதிலும் வரவில்லை

கருத்து

Please help to receive the kalaignar magalir urimai scholarship amount. I not received the second measages

கருத்து

நான் விண்ணப்பத்தை ஏற்கனவே பதிவு செய்து விட்டேன் ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் எனது தொலைபேசி எண்ணிற்கு வரவில்லை

கருத்து

விண்ணப்பத்து ஏற்கனவே சமர்ப்பித்து விட்டேன் ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை

கருத்து

I HAVE ALREADY SUBMITTED THE FORM.AM NOT RECEIVING ANY RESPONSE AND MONEY

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்