பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா

author
Submitted by shahrukh on Sat, 14/09/2024 - 15:36
CENTRAL GOVT CM
Scheme Open
Pradhanmantri Ujjwala Yojana Logo
Highlights
  • விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
  • புதிய எல்பிஜி இணைப்புக்கு நிகர பலனாக சுமார் ரூ. 3500 (தோராயமாக பிப்ரவரி/ 2022 வரை).
  • புலம்பெயர்ந்தோருக்கு முகவரி சான்று தேவையில்லை - சுய உறுதிமொழி போதுமானது.
Customer Care
  • எல்பிஜி அவசர உதவி எண் :- 1906.
  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (பிமஉயோ) கட்டணமில்லா உதவி எண் :- 18002333555.
  • உஜ்வாலா உதவி எண் :- 18002666696.
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா.
தொடங்கப்பட்ட ஆண்டு 2016.
பயங்கள்
  • இலவச எரிவாயு இணைப்பு.
  • ரூ. 300 மானியமானது 12 நிரப்புகள் வரை.
பயனாளிகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பருவம் அடைந்த பெண்கள்.
குறைத் தீர்க்கும் பிரிவு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.
குழு சேர புதுப்பிப்புச் செய்திகளைப் பெற இங்கே குழுசேரவும்.
விண்ணப்பிக்கும் முறை

திட்ட அறிமுகம்

  • இத்திட்டம் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால், மே 1-ம் தேதி, 2016-ம் ஆண்டு அன்று உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் தொடங்கப்பட்டது.
  • "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" என்பது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கம், கிராமப்புற மற்றும் ஆதரவற்ற குடும்பங்கள் பயன்படுத்தக்கூடிய பாரம்பரிய சமையல் எரிபொருளான நிலக்கரி, மாட்டு சாணம், விறகு, பயிர் எச்சம் போன்றவைகளுக்கு பதிலாக சுத்தமான சமையல் எரிபொரருள்களை வழங்குவதேயாகும்.
  • இந்த வகையான பாரம்பரிய சமையல் எரிபொருட்களின் பயன்பாடு, நமது கிராமப்புற பெண்களின் ஆரோக்கியத்திலும் சுற்றுச்சூழலிலும் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிரது.
  • எனவே இவை அனைத்தையும் மனதில் கொண்டு, இந்திய அரசு "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" என்கிற திட்டத்தை "ஸ்வச் இந்தன், பெஹ்தார் ஜீவன்" என்ற வாசகத்துடன் இணைத்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் (எம்ஓபிஎன்ஜி) வரம்பின் கீழ் தொடங்கியது.
  • ஆரம்பத்தில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 5 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" தொடங்கப்பட்டது, இதற்காக அரசு ரூ. 8000 கோடியை ஒதுக்கியது
  • பின்னர், இத்திட்டம் 8 கோடி குடும்பங்கள் பயனடைவதற்க்காக அரசு ரூ. 48000 கோடியை ஒதுக்கியது.
  • மேலும், பட்டியலினத்தவர் (எஸ்சி)/ பட்டியலின பழங்குடி மக்கள் (எஸ்டி), அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) பயனாளி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி), வனவாசிகள், தேயிலை மற்றும் முன்னாள் தேநீர் தோட்ட பழங்குடியினர், நதி தீவில் வசிக்கும் மக்கள் என ஏழு பிரிவுகளானோர் சேர்க்கப்படுவர் (பயனாளி தகுந்த ஆவணத்தை சமர்ப்பிப்பார்).
  • 2021-2022 நிதியாண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 1 கோடி எல்பிஜி இணைப்புகளை வழங்க அரசு அறிவித்துள்ளது.
  • நமது மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் (PMUY) இரண்டாவது பதிப்பான உஜ்வாலா 2.0 ஐ  ஆகஸ்ட் 10,2021 அன்று உத்தரபிரதேசத்தின் மஹோபாவில் எல்பிஜி இணைப்பை வழங்குதலின் மூலம் உஜ்வாலா 2.0-வின் பயனமானது தொடங்கியது.
  • இந்நிகழ்ச்சியின் போது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடி, நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
  • இதன் கீழ், மீதமுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 1 கோடி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்த குடும்பங்கள் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம், அவர்கள் உறுதிமொழி படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் பெறலாம்.
  • 2024 பிப்ரவரி 15 ஆம் தேதி நிலவரப்படி, அரசு இத்திட்டத்தின் கீழ் 102,228,333 எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளது.
  • அதேசமயம், உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் மொத்தம் 22,371,674 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
  • இலவச எரிவாயு இணைப்பு மற்றும் மானியமாக ரூ. 300/- பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது.
  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் புதிய எரிவாயு இணைப்புக்கு தகுதியான பெண் பயனாளிகள் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம்.

திட்டத்தின் பயன்கள்

  • ரூ. 1,600/- நிதியுதவியானது 14.2 கிலோ சிலிண்டர் இணைப்புக்கு.
  • ரூ. 1,150/- நிதியுதவியானது 5 கிலோ சிலிண்டருக்கு.
  • மானியமாக ரூ. 300/- ஒவ்வொரு பிஎம்யூஒய் (PMUY) எரிவாயு சிலிண்டர் நிரப்பலுக்கும்
  • ஒரு இணைப்பிற்கான இந்த நிதி உதவியானது பின்வரும் விவரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது :-
    • சிலிண்டர் பாதுகாப்பிற்க்கு ரூ. 1250 (14.2 கிலோவுக்கு) மற்றும் ரூ 800 (5             கிலோ) சிலிண்டருக்கு.
    • பிரஷர் ரெகுலேட்டர் பாதுகாப்பிற்க்கு 150 ரூபாய்.
    • எல்பிஜி (LPG) குழாய்க்கு : ரூ. 100.
    • வீட்டு எரிவாயு நுகர்வோர் அட்டைக்கு : ரூ. 25.
    • நிறுவல் கட்டணம் : ரூ. 75.
  • உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ், வைப்புத்தொகை இல்லாத எல்பிஜி இணைப்புடன், முதல் நிரப்பல் மற்றும் ஹாட் பிளேட் இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
  • புலம்பெயர்ந்தோர் ரேஷன் கார்டு அல்லது முகவரி சான்று சமர்ப்பிக்க தேவையில்லை.
  • "குடும்ப உறுதிமொழி" மற்றும் "முகவரி சான்று" ஆகிய இரண்டிற்கும் ஒரு "சுய உறுதிமொழி" போதுமானது.

தகுதி நிபந்தனைகள்

  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தை பெற, விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் :-
    • பெண் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
    • பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்த பருவம் அடைந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் :-
      • எஸ்சி/எஸ்டி குடும்பங்கள்.
      • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
      • பிரதான் மந்திரி அவே யோஜனா (AAY)
      • பழங்குடி மக்கள்.
      • தீவுகள்/ நதி தீவுகளில் வசிப்பவர்கள்.
      • சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு குடும்பங்களில் பட்டியலிடப்பட்டவர் (AHL TIN)
      • தேயிலை மற்றும் முன்னாள் தேயிலைத் தோட்ட பழங்குடியினர்.
      • பிற ஏழைக் குடும்பங்கள் (இதற்கு அவர்கள் 14 அம்ச உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும்)
    • மேலே குறிப்பிட்டுள்ள வகையினர் பின்வரும் எந்தவொரு உடைமையும் வைத்திருக்கக்கூடாது, இல்லையெனில் அவர்களின் விண்ணப்பம் தகுதி நீக்கம் செய்யப்படும் :-
      • 2/3/4 சக்கர வாகனம் அல்லது மீன்பிடி மோட்டார் பொருத்தப்பட்ட படகு.
      • இயந்திரமயமாக்கப்பட்ட 3/4 சக்கர விவசாய உபகரணங்கள்.
      • கிசான் கடன் அட்டை வரம்பு ரூ. 50,000 -க்கு மேல்.
      • குடும்பத்தில் உள்ள எவரும் அரசாங்க ஊழியராக இருந்தால்.
      • அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயம் அல்லாத நிறுவனங்களைக் கொண்ட குடும்பங்கள்.
      • குடும்பத்தில் உள்ள எந்த உறுப்பினரின் ஒரு மாத வருமானம் ரூ. 10,000க்கு மேல்.
      • வருமானம் அல்லது தொழில்முறை வரி செலுத்துபவரானால்.
      • நிரந்தர சுவர்கள் மற்றும் கூரையுடன் கூடிய 3 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட குடும்பங்கள்.
      • குளிர்சாதனப் பெட்டி.
      • தரைவழி தொலைபேசி வைத்திருப்பவர்.
      • 2.5 ஏக்கருக்கும் அதிகமான பாசன நிலங்களுடன் ஒரு பாசன இயந்திரம்.
      • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர் பருவத்திற்கு, 5 ஏக்கர் பாசன நிலங்கள் அல்லது அதற்கு மேல் வைத்திருந்தால்.
      • 7.5 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலங்களுடன் குறைந்தபட்சம் ஒரு பாசன இயந்திரம் வைத்திருந்தால்.

தேவையான ஆவணங்கள்

  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா விண்ணப்பப் படிவத்துடன் பயனாளி தங்கள் தகுதிக்கான பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் :-
    • அந்தந்த மாநில அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை
    • முகவரிச் சான்று (ஏதாவது ஒன்று)
      • வாக்காளர் அடையாள அட்டை
      • ஆதார் அட்டை
    • மின்சாரம், தண்ணீர் அல்லது தொலைபேசி இணைப்புக் கட்டன ரசீதுகள்
      • அடையாளச் சான்று (ஏதாவது ஒன்று)
      • வாக்காளர் அடையாள அட்டை
      • ஆதார் அட்டை
      • பான் கார்டு
    • வாகன ஒட்டி உரிமம்
    • விண்ணப்பதாரர் வங்கி பாஸ்புக்
    • ஓட்டுநர் உரிமம் (தேவைப்பட்டால்)
    • குத்தகை ஒப்பந்தம் (தேவைப்பட்டால்)
    • மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவைப்பட்டால்)
    • மாநில அரசால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்
    • அரசிதழ் (கசட்டட்) அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட சுய உறுதிமொழி (புலம்பெயர்ந்தோர் மட்டும்)
    • பிளாட் ஒதுக்கீடு அறிக்கை (தேவைப்பட்டால்)
    • எல்ஐசி பாலிசி (தேவைப்பட்டால்)
    • கிசான் பாஸ்புக் (தேவைப்பட்டால்)
    • பாமாஷா அட்டை/ஜன் ஆதார் அட்டை (தேவைப்பட்டால்)
    • சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

விண்ணப்பிக்கும் முறை

  • தகுதியான பயனாளி உஜ்வாலா 2.0 திட்டத்திற்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம், அதற்க்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-

    இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை

    பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க பின்வரும் செயல்முறைகளை பின்பற்றவும்:
    • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் பிஎம்யுவி இணையதளம் மூலமாக பெறலாம்.
    • இண்டேன், பாரத்காஸ் அல்லது எச்பி கேஸ் போன்ற எரிவாயு நிறுவனங்களைத் உங்களுக்கு விருப்பத்திற்கேர்ப்ப தேர்ந்தெடுக்கலாம்.
    • விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கு முன் நீங்கள் பின்வரும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் :-
      • விண்ணப்பதாரரின் பெயர்
      • தொலைபேசி எண்
      • மின்னஞ்சல் முகவரி (இருந்தால்)
    • பதிவு செய்த பிறகு, அதே இணையதளத்தில் உருவாக்கப்பட்ட விவரங்களுடன் உள்நுழையவும்.
    • விண்ணப்ப விவரங்களை கவனமாக நிரப்பவும், தேவைப்பட்டால் ஆவணங்களை பதிவேற்றவும்.
    • இறுதி சமர்ப்பிப்புக்கு முன் பிஎம்யுஒய் (PMUY) விண்ணப்பத்தில் நிரப்பப்பட்ட விவரங்களை சரிபார்க்கவும்.
    • முதலில் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தால் சரிபார்க்கப்படும்.
    • வெற்றிகரமான அங்கீகாரத்திற்குப் பிறகு, எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

    ஆஃப்லைனில் விண்ணப்பிக்கும் முறை

    • தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பிஎம்யுஒய் (PMUY) விண்ணப்பத்தை ஆஃப்லைன் படிவத்தின் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
    • நீங்கள் எந்த எல்பிஜி விநியோகஸ்தர் நிறுவனத்திடமிருந்தும் 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.
    • இந்த பிஎம்யுஒய் (PMUY) விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் ஒவ்வொரு விவரங்களையும் கவனமாக நிரப்ப வேண்டும்.
    • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கேஒய்சி (KYC) ஐ உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
    • முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை ஏஜென்சிக்கு சமர்ப்பிக்கவும்.
    • நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்ப படிவத்தை எரிவாயு நிறுவனம் சரிபார்க்கும்.
    • வெற்றிகரமான சரிபார்ப்பிற்குப் பிறகு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
Pradhanmantri Ujjwala Yojana Achievements

முக்கியமான படிவங்கள்

முக்கியமான இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

  • எல்பிஜி (LPG) அவசர உதவி எண் :- 1906.
  • பிஎம்யுஒய் (PMUY) கட்டணமில்லா உதவி எண் :-
    • 18002333555.
    • 18002666696.
  • உஜ்வாலா உதவி எண் :- 18002666696.
Economic Background

Comments

கருத்து

Sir I am kahunu dalei,I am ujjwal beneficial consumer,my family all person adhaar are connected with this account.
Now my son staying in tamilnadu Chennai,he is facing problem at the time of booking his LPG gas for his adhar connection with my ujjwal account.
Please solve my problem

Your Name
Shahida Begum
கருத்து

Sir I am shahida Khatun from baladmari char 2 po baladmari char district Goalpara assam I am belong to poor family so need a gas connection I request you please grant me the application

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்