பிரகதி உதவித்தொகை திட்டம்

author
Submitted by shahrukh on Tue, 18/06/2024 - 15:26
CENTRAL GOVT CM
Scheme Open
Pragati Scholarship Scheme Logo
Highlights
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) - யின் பிரகதி உதவித்தொகை திட்டத்தின் கீழ், பின்வரும் வருடாந்திர நிதி உதவிப் பெறுவார்கள் :-
    • கல்வி உதவித் தொகை ரூ. 50,000/- ஆண்டுக்கு வழங்கப்படுகிறது.
    • தொழில்நுட்ப டிப்லமோ படிப்புக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.
    • தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.
Customer Care
  • பிரகதி உதவித்தொகை திட்டம் உதவி எண் :- 011-29581118.
  • பிரகதி உதவித்தொகை திட்டம் மின்னஞ்சல் முகவரி :- pragati@aicte-india.org.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) உதவி மையம் எண் :- 011-26131497.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) உதவி மையம் மின்னஞ்சல் முகவரி :-  ms@aicte-india.org.
  • தேசிய உதவித்தொகை இணையதளம் உதவி எண் :- 0120-6619540.
  • தேசிய உதவித்தொகை இணையதளம் மின்னஞ்சல்முகவரி :- helpdesk@nsp.gov.in.
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் பிரகதி உதவித்தொகை திட்டம்.
எண்ணிக்கை விவரம்
  • தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 5,000 இடங்கள்.
  • தொழில்நுட்ப பட்டயப் படிப்புக்கு 5,000 இடங்கள்.
உதவித்தொகை தொகை ரூ. 50,000/- ஆண்டுக்கு.
உதவித்தொகை தொகைக்கான கால அளவு
  • தொழில்நுட்ப பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள்.
  • தொழில்நுட்ப டிப்ளமோ மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள்.
தகுதி ஒரு குடும்பத்திற்கு இரண்டு பெண் மாணவர்கள் தகுதியுடையவர்கள்.
குறைத் தீர்க்கும் துறை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு.
குறைத் தீர்க்கும் அமைச்சகம் பள்ளிக் கல்வி துறை/ உயர்கல்வித் துறை.
குழு சேர புதுப்பிப்புச் செய்திகளைப் பெற இங்கே குழுசேரவும்.
விண்ணப்பிக்கும் முறை பிரகதி உதவித்தொகை திட்டம் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் மூலம்.

திட்ட அறிமுகம்

  • மாணவியர்கள் தங்கள் அடிப்படை கல்வியை முடித்து உயர் கல்வியைத் தொடர ஊக்குவிக்க இந்திய அரசு ஏராளமான உதவித்தொகைத் திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
  • பிரகதி உதவித்தொகை திட்டம் மாணவியர்களுக்கான முக்கிய கல்வி சீர்திருத்த உதவித்தொகை திட்டங்களில் ஒன்றாகும்.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவானது இத்திட்டத்தை செயல்படுத்திவருகிறது.
  • பிரகதி உதவித்தொகைத் திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கம், மாணவியர்கள் நிதிச் சுமையைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் உயர்கல்வியைத் தொடரவும் முடிக்கவும் ஊக்குவிப்பதாகும்.
  • இந்தத் திட்டம், "மாணவியர்களுக்கான பிரகதி உதவித்தொகைத் திட்டம்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • பிரகதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அனைத்து மாணவியர்களுக்கும் உயர்கல்விக்கான உதவித்தொகையாக ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கப்படும்.
  • கல்லூரிக் கட்டணம், புத்தகங்கள், கணினி மற்றும் படிப்பு தொடர்பான பொருட்கள் வாங்குவதற்க்கான செலவுகளுக்கு ரூ. 50,000/- உதவித்தொகையானது ஆண்டுக்கு வழங்கப்படும்.
  • பிரகதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வருடத்திற்க்கு 10,000 மாணவியர்கள், தங்கள் கல்விக்கான நிதி உதவியை ஆண்டுதோறும் பெறுவார்கள்.
  • 5,000 இடங்கள் பட்டப்படிப்பு மாணவியர்களுக்கும் மற்றும் 5,000 இடங்கள் டிப்லமோ மாணவியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தொழில்நுட்ப பட்டப்படிப்பு அல்லது தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பில் உயர்கல்வி பயிலும் பெண்கள் மட்டுமே பிரகதி உதவித்தொகை திட்டத்தின் பயனைப் பெற தகுதியுடையவர்கள்.
  • தொழில்நுட்ப பட்டப்படிப்பு மாணவிகளுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்.
  • தொழில்நுட்ப டிப்லமோ படிப்பு மாணவிகளுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்.
  • பிரகதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வருடாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, தேசிய உதவித்தொகை இணையதளத்தில் கிடைக்கும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பிரகதி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31-01-2024 ஆகும்.
  • மாணவியர்கள், பிரகதி உதவித்தொகை திட்டத்திற்கு ஜனவரி 31,2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கவும்.

பயன்கள்

  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) - யின் பிரகதி உதவித்தொகை திட்டத்தின் கீழ், பின்வரும் வருடாந்திர நிதி உதவிப் பெறுவார்கள் :-
    • கல்வி உதவித் தொகை ரூ. 50,000/- ஆண்டுக்கு வழங்கப்படுகிறது.
    • தொழில்நுட்ப டிப்லமோ படிப்புக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.
    • தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதி நிபந்தனைகள்

  • மாணவியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
  • மாணவியின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் மேல் இருக்கக்கூடாது.
  • தொழில்நுட்ப பட்டப்படிப்பு அல்லது தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பில் சேர்க்கை பெறும் மாணவியர் தகுதியானவர்.
  • முதலாம் ஆண்டு மாணவர் அல்லது இரண்டாம் ஆண்டு மாணவர் (நேரடி நுழைவு மூலம் சேர்க்கப்பட்டவர்) தகுதியானவர்கள்.
  • மாணவியின் கல்வி நிறுவனமானது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் (AICTE) அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • மாணவி, எந்த ஒரு மத்திய/ மாநில/ ஏ.ஐ.சி.டி.இ -யின் உதவித்தொகை பெரும் பயனாளியாக இருக்கக்கூடாது.

தேவையான ஆவணங்கள்

விண்ணப்பிக்கும் முறை

  • பிரகதி உதவித்தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த மாணவிகள் ஆன்லைன் விண்ணப்ப படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • பிரகதி உதவித்தொகை திட்டத்தின் ஆன்லைன் விண்ணப்ப படிவம், தேசிய உதவித்தொகை இணையதளத்தில் கிடைக்கும்.
  • மாணவிகள் தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ள, முதலில் புதிய பதிவு என்பதை கிளிக் செய்யவும்.
  • பிரகதி உதவித்தொகை திட்டத்தின் பதிவு படிவத்தில் பின்வரும் விவரங்களை நிரப்பவும் :-
    • குடியிருப்புப் மாநிலம்.
    • உதவித்தொகையின் வகை அதாவது பள்ளிப்படிப்பு நிறைவடையும் முன் அல்லது பள்ளிப்படிப்பு நிறைவடைந்த பின்.
    • மாணவியின் பெயர்.
    • திட்ட வகை.
    • பிறந்த தேதி.
    • பாலினம்.
    • மொபைல் எண்.
    • மின்னஞ்சல் முகவரி.
    • வங்கி ஐ.எப்.எஸ்.சி குறியீடு.
    • வங்கிக் கணக்கு எண்.
    • ஆதார் எண்.
  • தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பதிவு என்பதைக் கிளிக் செய்க.
  • கிடைக்கப்பெற்ற உள்நுழைவு விவரங்ள் கொண்டு, பிரகதி உதவித்தொகை திட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்நுழைக.
  • பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களிள், பிரகதி உதவித்தொகை திட்டத்தை தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, ஆவனங்களை பதிவேற்றிய பிறகு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • பிரகதி உதவித்தொகை திட்டத்தின் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள், மாணவி படிக்கும் நிறுவனத்தாலும், மாணவி வசிக்கும் மாநிலம்/ யூனியன் பிரதேசத்தின் தொழில்நுட்பக் கல்வித் துறையாலும் ஆராயப்பட்ட பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியரின் பட்டியலானது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) இணையதளத்தில் கிடைக்கும்.
  • இந்தத் திட்டம் புதுப்பிக்கப்படுவதற்கு உட்பட்டது, எனவே மாணவியர் ஒவ்வொரு ஆண்டும் பிரகதி உதவித்தொகை திட்ட விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும்.
  • 2023-2024 -க்கான பிரகதி உதவித்தொகை திட்ட விண்ணப்பமானது, 31-01-2024 வரை செயலில் இருக்கும்.
  • மாணவிகள் பிரகதி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31, 2024.
  • தகுதியான மாணவிகள் பிரகதி உதவித்தொகை திட்டத்திற்கு 31-01-2024 வரை அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு நடைமுறை

தொழில்நுட்ப பட்டப்படிப்பு நிலைக்கானது

  • 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான தகுதித் தேர்வு அடிப்படையில் பிரகதி உதவித்தொகைத் திட்டத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் சமநிலை போட்டியாளர் இருந்தால், பின்வரும் நடைமுறை பின்பற்றப்படும் :-
    • 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர் அதிக தரவரிசை பெறுவார்.
    • 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களிலும் சமநிலை ஏற்ப்பட்டால், மூத்த வயதுடையவர் அதிக தரவரிசை பெறுவார்.
    • மேற்கூறிய முறையில் சமநிலை ஏற்ப்பட்டால், குறைந்த வருடாந்திர குடும்ப வருமானம் கொண்டவர் அதிக தரவரிசை பெறுவார்.

தொழில்நுட்ப டிப்ளமோ நிலைக்கானது

  • டிப்ளமா படிப்பைத் தொடர தகுதித் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
  • டிப்ளமா படிப்புக்கான தகுதி தேர்வு 10 ஆம் வகுப்பு ஆகும்.
  • தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் சமநிலை போட்டியாளர் இருந்தால், பின்வரும் நடைமுறை பின்பற்றப்படும் :-
    • மூத்த வயதுடையவர் அதிக தரவரிசை பெறுவார்.
    • வயது அடிப்படையிலும் சமநிலை ஏற்ப்பட்டால், குறைந்த வருடாந்திர குடும்ப வருமானம் கொண்டவர் அதிக தரவரிசை பெறுவார்.

திட்டத்தின் அம்சங்கள்

  • பிரகதி உதவித்தொகை திட்டம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கப்படும்.
  • இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகும்.
  • மாணவியர் இடையில் பாடத்திட்டத்தை கைவிட்டால், அவர்/ அவள் பிரகதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மேலும் உதவித்தொகைக்கு தகுதி பெற மாட்டார்கள்.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கப்படும்.
  • மாணவியர் எந்தவொரு மத்திய/ மாநில/ அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) உதவித்தொகையின் பயனாளியாக இருக்கக்கூடாது.
  • ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதியான மாணவியர்களுக்கு மட்டும் உதவித்தொகை கிடைக்கப்படும்.
  • இந்த 10,000 இடங்களில், 5,000 இடங்கள் பட்டப்படிப்பு மாணவியர்களுக்கும் மற்றும் 5,000 இடங்கள் டிப்லமோ மாணவியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மாணவியர்கள் தங்கள் பாடத்திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டில் மட்டும், திட்டத்தின் பயனைப் பெற முடியும்.
  • மாணவிகளுக்கு உதவித்தொகையானது, பின்வரும் செலவுகளுக்காக வழங்கப்படும் :-
    • கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்கு.
    • உபகரணங்கள்.
    • புத்தகங்கள்.
    • கணினி வாங்குதல்.
    • டெஸ்க்டாப்.
    • மென்பொருள் கொள்முதல் போன்றவை.
  • பிரகதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விடுதி கட்டணம் அல்லது மருத்துவ கட்டணங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படாது.
  • தேர்வு முறை முற்றிலும் தகுதி அடிப்படையில் இருக்கும்.
  • தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் தொழில்நுட்ப டிப்ளோமா படிக்கும் மாணவிகள் உதவித்தொகைக்கு தகுதியுடையவர்கள்.
  • அங்கீகரிக்கப்பட்ட மாணவிகளின் பட்டியலியலானது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) இணையதளத்தில் கிடைக்கும்.
  • ஒட்டுமொத்த தரப் புள்ளி (CGPA)ஐ சதவீதமாக மாற்றுவதற்கான கணக்கீடு முறையானது, CGPAஐ 9.5 உடன் பெருக்குவதாகும் (CGPA × 9.5)
  • உதவித்தொகையானது மானவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
  • மாணவி அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற தவறினால், அவர்களின் உதவித்தொகை நிருத்தப்படும்.
  • உதவித்தொகை விண்ணப்பத்தைப் புதுப்பிக்கும் போது பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழைப் பதிவேற்றுவது கட்டாயமாகும்.
  • இத்திட்டத்தின் பலன்களைப் பெறும்போது ஆவணச் சான்றுகள் எதுவும் இணைக்கப்பட வேண்டியதில்லை.
  • இடஒதுக்கீடு இந்திய அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை மாநில வாரியான இடங்களின் எண்ணிக்கை

  • மாநிலத்தின் படி பிரகதி உதவித்தொகை திட்டத்தின் உதவித்தொகைக்கான இடங்கள் பின்வருமாறு :-
    மாநிலம்/ யூனியன் பிரதேசம் பட்டப்படிப்பிற்க்கான
    உதவித்தொகை
    டிப்ளமா படிப்பிற்க்கான
    உதவித்தொகை
    ஆந்திரப் பிரதேசம் 566 318
    பீகார் 52 84
    சண்டிகர் (யூனியன் பிரதேசம்) 50 50
    சத்தீஸ்கர் 62 62
    டெல்லி (NCT) 50 50
    கோவா 50 50
    குஜராத் 219 284
    ஹரியானா 134 191
    இமாச்சலப் பிரதேசம் 50 50
    ஜார்க்கண்ட் 50 67
    கர்நாடகா 398 365
    கேரளா 196 109
    மத்தியப் பிரதேசம் 285 192
    மஹாராஷ்டிரா 553 624
    ஒடிஷா 134 205
    புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) 50 50
    பஞ்சாப் 124 208
    ராஜஸ்தான் 152 170
    தமிழ்நாடு 800 700
    தெலுங்கானா 424 206
    உத்தரப்பிரதேசம் 422 700
    உத்தராகண்ட் 50 81
    மேற்கு வங்கம் 129 184
    மொத்தம் 5,000 5,000

அனைத்து தகுதியான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் மாநிலங்களின் பட்டியல்

  • நிர்ணயிக்கப்பட்ட 5,000 இடங்கள் அல்லாமல், பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்து விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைத்து மாணவிகளுக்கும் பிரகதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் :-
    மாநிலம்/ யூனியன் பிரதேசம் இடங்ககுக்கான எண்ணிக்கை
    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு (யூனியன் பிரதேசம்) தகுதியுள்ள அனைத்து மாணவியர்களுக்கும்
    தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி &
    டாமன் மற்றும் டையூ (யூனியன் பிரதேசம்)
    ஜம்மு காஷ்மீர் (யூனியன் பிரதேசம்)
    லடாக் (யூனியன் பிரதேசம்)
    இலட்சத்தீவு (யூனியன் பிரதேசம்)
    அருணாச்சலப் பிரதேசம்
    அசாம
    மணிப்பூர்
    மேகாலயா
    மிஸோராம்
    நாகாலாந்து
    சிக்கிம்
    திரிபுரா

முக்கியமான வடிவங்கள்

முக்கியமான இணைப்புகள்

தொடர்பு விவரங்கள்

  • பிரகதி உதவித்தொகை திட்டம் உதவி எண் :- 011-29581118.
  • பிரகதி உதவித்தொகை திட்டம் மின்னஞ்சல் முகவரி :- pragati@aicte-india.org.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) உதவி மையம் எண் :- 011-26131497.
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) உதவி மையம் மின்னஞ்சல் முகவரி :-  ms@aicte-india.org.
  • தேசிய உதவித்தொகை இணையதளம் உதவி எண் :- 0120-6619540.
  • தேசிய உதவித்தொகை இணையதளம் மின்னஞ்சல்முகவரி :- helpdesk@nsp.gov.in.
  • மாணவர் மேம்பாட்டு பிரிவு (StDC)
    அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்
    வசந்த் குஞ்ச், நெல்சன் மண்டேலா மார்க்,
    புது தில்லி - 110070.

Matching schemes for sector: Education

Sno CM Scheme Govt
1 PM Scholarship Scheme For The Wards And Widows Of Ex Servicemen/Ex Coast Guard Personnel CENTRAL GOVT
2 Begum Hazrat Mahal Scholarship Scheme CENTRAL GOVT
3 Kasturba Gandhi Balika Vidyalaya CENTRAL GOVT
4 Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) CENTRAL GOVT
5 Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana(DDU-GKY) CENTRAL GOVT
6 SHRESHTA Scheme 2022 CENTRAL GOVT
7 National Means Cum Merit Scholarship Scheme CENTRAL GOVT
8 Rail Kaushal Vikas Yojana CENTRAL GOVT
9 ஸ்வநாத் உதவித்தொகை திட்டம் CENTRAL GOVT
10 Saksham Scholarship Scheme CENTRAL GOVT
11 Ishan Uday Special Scholarship Scheme CENTRAL GOVT
12 Indira Gandhi Scholarship Scheme for Single Girl Child CENTRAL GOVT
13 நை உதான் திட்டம் CENTRAL GOVT
14 Central Sector Scheme of Scholarship CENTRAL GOVT
15 North Eastern Council (NEC) Merit Scholarship Scheme CENTRAL GOVT
16 Schedule Caste (SC), Other Backward Class (OBC) Free Coaching Scheme CENTRAL GOVT
17 Jamia Millia Islamia (JMI) RCA Free Coaching Program for Civil Services CENTRAL GOVT
18 Aligarh Muslim University Free Coaching Scheme for Civil Services CENTRAL GOVT
19 Aligarh Muslim University Free Coaching Scheme for Judicial Examination CENTRAL GOVT
20 Aligarh Muslim University Free Coaching Scheme for SSC CGL Examination. CENTRAL GOVT
21 PM Yasasvi Scheme CENTRAL GOVT
22 CBSE UDAAN Scheme CENTRAL GOVT
23 Atiya Foundation Free Coaching Program for Civil Services CENTRAL GOVT
24 National Scholarship for Post Graduate Studies CENTRAL GOVT
25 Vigyan Dhara Scheme CENTRAL GOVT

Comments

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்