பெண்களுக்கான தமிழ்நாடு இலவசப் பேருந்து பயணத் திட்டம்

author
Submitted by shahrukh on Thu, 02/05/2024 - 13:14
தமிழ்நாடு CM
Scheme Open
Highlights
  • பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள்/ திருநங்கைகள் இவர்களுக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படும் :-
    • தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
    • 30 கிலோமீட்டர் வரை எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் பெண்களுக்கான தமிழ்நாடு இலவசப் பேருந்து பயணத் திட்டம்.
துவங்கிய தேதி 2021
பயன்கள் தமிழக அரசு இயக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம்.
பயனாளிகள் தமிழக பெண்கள்.
குறைத் தீர்க்கும் பிரிவு சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை, தமிழ்நாடு அரசு.
சந்தா பெண்களுக்கான தமிழ்நாடு இலவசப் பேருந்து பயணத் திட்டம் பற்றிய உடனடி தகவலுக்கு இணையுங்கள்
விண்ணப்பிக்கும் முறை பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயண திட்டத்திற்கு எங்கும் விண்ணப்பிக்க தேவையில்லை.

திட்ட அறிமுகம்

  • தமிழக அரசு தமிழக மக்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
  • தமிழக பெண்களுக்கான சமூக நலத் திட்டங்களில் ஒன்று விலையில்லா பேருந்துப் பயணத் திட்டம்.
  • இது 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
  • இலவசப் பேருந்து பயணத் திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கம், உயர் வேலைப் பங்கேற்பிற்காக தமிழகப் பெண்களை ஊக்குவிப்பதும், தனியார் போக்குவரத்தை சார்ந்திருப்பதைக் குறைப்பதும் ஆகும்.
  • பெரும்பாலான வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கான வசதி குறைவாக இருக்கிறது.
  • பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணப்பதால் பெண்களுக்கு நிதி ரீதியாக, அதிக சுமைகளை ஏற்படுத்துகிறது.
  • எனவே, தமிழகப் பெண்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில், அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய தமிழக அரசு, இத்திட்டத்தை துவங்கியுள்ளது.
  • தமிழ்நாடு இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு இயக்கப்படும் பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்தால் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
  • பயணத்தின் போது பயனாளிகளுக்கு விலையில்லா கட்டண டிக்கெட் வழங்கப்படும்.
  • அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் 30 கிலோமீட்டர் வரை மட்டுமே செல்லுபடியாகும்.
  • பயனாளிகள் சரிபார்ப்பு நோக்கத்திற்காக புகைப்படம் உள்ள அடையாள அட்டை ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
  • தமிழ்நாட்டின் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளும் இலவசமாகப் பயணம் செய்யத் தகுதியுடையவர்கள்.
  •  தமிழ்நாடு அரசு இயக்கப்படும் சாதாரண/ மாநகரப் பேருந்துகள் அல்லது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படும்.
  • பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தில் பயன்ப் பெற எங்கும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
  • தமிழக அரசின் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

திட்டத்தின் பயன்கள்

  • பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள்/ திருநங்கைகள் இவர்களுக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படும் :-
    • தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
    • 30 கிலோமீட்டர் வரை எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

பயனாளிகள் தகுதி நெறி முறைகள்

  • பெண்கள் தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • பெண்களுக்கான தமிழ்நாடு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் பலனைப் பெற, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பெண் பயனாளிகள் பேருந்து நடத்துனரிடம் பயணத்தின் போது காண்பிக்க வேண்டும் :-
    • ஆதார் அட்டை.
    • வாக்காளர் அடையாள அட்டை.
    • பள்ளி அடையாள அட்டை.
    • கல்லூரி அடையாள அட்டை.
    • பணியாளர் அடையாள அட்டை.
    • அல்லது புகைப்படம் உள்ள வேறு ஏதேனும் அடையாள அட்டை.

விண்ணப்பிக்கும் முறை

  • பெண்களுக்கான தமிழ்நாடு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்திற்கு எங்கும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
  • தமிழ்நாட்டின் பெண் பயனாளிகள் தமிழ்நாடு அரசு இயக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்யலாம்.
  • ஆனால் இந்த திட்டத்தில் கிலோமீட்டர் வரம்பு உள்ளது.
  • தமிழ்கத்தில் 30 கிலோமீட்டர் தூரம் வரையிலான அரசுப் பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய முடியும்.
  • பயணத்தின் போது சரிபார்ப்பு நோக்கங்களுக்காக புகைப்படம் உள்ள அடையாள அட்டை தேவை.
  • பயனாளிகள் நேரடியாக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து இலவசப் பயணத்தின் பயனைப் பெறலாம்.

முக்கிய இணைய தள இணைப்பு முகவரிகள்

பயனாளிகள் இணைய சேவை மையம்

Comments

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்